சத்தீஸ்கர், 15 ஏப்ரல் (பெர்னாமா) -- கிழக்கு இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று, செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
மேலும், பலர் காயமடைந்த வேளையில், சுமார் 13 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சக்தி மாவட்டத்தில் உள்ள ஆலையில் கொதிகலன் குழாய் வெடித்ததே இதற்குக் காரணம் என்று உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த வெடிவிபத்தினால், பலர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகினர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள ராய்கர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]