Ad Banner
Ad Banner
 விளையாட்டு

மொந்தி கார்லோ; அரையிறுதி ஆட்டத்தில் அல்கராஸ்

11/04/2026 04:09 PM

ரோக்கபன் - கேப்-மொர்டான், ஏப்ரல் 11 (பெர்னாமா) -- மொந்தி கார்லோ மாஸ்டர்ஸ்  டென்னிஸ் போட்டி.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்று உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் கார்லோஸ் அல்கராஸ் அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வாகினார்.

கஸகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்குடன் அல்கராஸ் விளையாடினார்.

இந்த ஆட்டத்தில் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாமல்  6-3 6-0 என்ற நேரடி செட்களில் அவர் வெற்றி பெற்றார்.

அரையிறுதி ஆட்டத்தில் அல்கராஸ், உலகின் 23-ஆம் நிலையில் உள்ள வாலண்டின் வாச்செரோட்டுடன் மோதவுள்ளார்.

இதனிடையே வாலண்டின் வாச்செரோட் - அலெக்ஸ் டி மினாவுர் களமிறங்கிய ஆட்டம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

முதல் செட்டில் 6-4 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்ற வாலண்டின் இரண்டாம் செட்டில் 3-6 என்று தோல்வி கண்டார்.

திறமையான ஆட்டத்தை வெளிபடுத்திய வாலண்டின் மூன்றாம் செட்டை 6-3 என்ற புள்ளிகளில் கைப்பற்றி, அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், Felix Auger-Aliassime-உடன் விளையாடிய Jannick Sinner  6-3 6-4 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்றார்.

இவர்களின் ஆட்டம் 92 நிமிடங்கள் வரை நீடித்தது.

அரையிறுதி ஆட்டத்தில், Sinner, Alexander Zverev-உடன் விளையாடவிருக்கிறார்.

பிரேசிலின் Joao Fonseca-வுடன் மோதிய Alexander Zverev சற்று சிரமத்தை எதிர்நோக்கி, காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.

முதல் செட்டில்  7-5 என்ற புள்ளிகளில்  வெற்றி பெற்றாலும், இரண்டாம் செட்டில் 6-7 என்ற நிலையில் தோல்வி கண்டார்.

இருப்பினும் மூன்றா செட்டில் 6-3 என்ற நிலையில் வெற்றி பெற்று,  Zverev அரையிறுதிக்கான தமது நுழைவுச் சீட்டை உறுதிபடுத்தினார்.

 -- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)