Ad Banner
Ad Banner
 விளையாட்டு

ஃபிரிட்சை வீழ்த்தினார் அல்கராஸ்

12/11/2025 07:17 PM

டொரினொ, 12 நவம்பர் (பெர்னாமா) -- ஏடிபி இறுதி டென்னிஸ் போட்டி

ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான கார்லோஸ் அல்கராஸ் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்சைத் தோற்கடித்தார்.

இதன் மூலம் தமது இரண்டாம் வெற்றியைப் பதிவு செய்துள்ள அல்கராஸ் ஏடிபி இறுதிப் போட்டிக்குத் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டார்.

இத்தாலி டொரினோவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் டெய்லர் ஃபிரிட்சுடன் கடுமையான ஆட்டங்களை எதிர்கொண்டார்.

6-7 என்ற நிலையில் முதல் செட்டில் தோல்விகண்ட அல்கராஸ் அடுத்த இரு செட்களில் தொடர்ந்து போராடி 7-5 மற்றும் 6-3 என்ற புள்ளிகளில் வெற்றிப் பெற்றார்.

இவ்வாட்டம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் நீடித்தது.

அதேபோல இத்தாலியின் ஓரென்சோ முசெட்டியும் இப்போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)