Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா

02/04/2026 05:47 PM

புளோரிடா, 02 ஏப்ரல் (பெர்னாமா) -- 50 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பின் அமெரிக்காவின் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை நோக்கி பயணமாகினர்.

நாசாவின் அந்த சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II (Artemis II) விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஆர்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

நிலவைச் சுற்றி மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வுப் பயணம் சுமார் 10 நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1972-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அப்பல்லோ திட்டத்தின் இறுதிப் பயணத்திற்குப் பிறகு, நிலவை நோக்கிய அமெரிக்காவின் முதல் பயணம் இதுவாகும் என நாசா கூறியது.

மனிதர்களை மீண்டும் நிலவுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் அனுப்பு நாசா மேற்கொண்டு வரும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)