Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஹார்மொனி மடானி சந்திப்பு நிகழ்ச்சி நல்லிணக்கத்தைப் பேண உதவும்

19/03/2026 05:00 PM

கோலாலம்பூர், 19 மார்ச் (பெர்னாமா) -- புதன்கிழமை நடைபெற்ற 'Harmoni MADANI' சந்திப்பு நிகழ்ச்சி, பேச்சுவார்த்தைகள் மூலம் தீவிரமான பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்பதை புலப்படுத்தியிருப்பதாக டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

புத்ராஜயாவில் நடைபெற்ற மலாய் மற்றும் இந்திய சமூகத்தை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இடையிலான அச்சந்திப்பு, அனுமதியின்றி கட்டப்படும் வழிபாட்டுத் தலங்கள் குறித்து எழுந்துள்ள இனப் பதற்றங்களைத் தணிக்க உதவும் என்று அவர் என்று கூறினார்.

இரு பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் ஆக்கப்பூர்வமாக விவாதித்து, கைகுலுக்கி, கட்டித்தழுவி, கடந்தகால சம்பவங்களை மறந்து முன்னோக்கிச் செல்ல விருப்பம் காட்டியதால், அச்சந்திப்பு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக முஹமட் காலிட் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பையும் தேசிய ஒற்றுமை உணர்வையும் பி.டி.ஆர்.எம் பெரிதும் பாராட்டுகிறது. இது, தேசிய நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைப் பேண அதிகாரிகளுக்கு உதவுகிறது,'' என்றார் அவர்.

மேலும், சுய ஆதாயத்திற்காக இன மற்றும் மதப் பிரச்சனைகளைத் தூண்ட முயற்சிக்கும் எந்தவொரு தனிநபர் அல்லது குழுவிற்கும் முஹமட் காலிட் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)