ஜெனீவா, 19 மார்ச் (பெர்னாமா) -- லெபனானில் சுகாதாரப் பராமரிப்பு மையங்கள் மீது 28 தாக்குதல்கள், ஈரானில் 20 தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேலில் 2 தாக்குதல்களும் நடத்தப்பட்டதை தங்கள் தரப்பு உறுதி செய்துள்ளதை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெட்ரோஸ் அதானோம் கெப்ரியெசுஸ் சுட்டிக்காட்டினார்.
இத்தாக்குதல்களில், 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
''சுகாதாரப் பாதுகாப்பு மீதான தாக்குதல்கள் தொடர்ந்து பதிவாகி வருவதாக மிகவும் கவலையளிக்கிறது. லெபனானில், 30 பேர் உயிரிழந்த மற்றும் 25 பேர் காயமடைந்த 28 தாக்குதல்களை WHO உறுதி செய்துள்ளது. ஈரானில், 9 பேர் உயிரிழந்த 20 தாக்குதல்களை WHO உறுதி செய்துள்ளது. மேலும் ,இஸ்ரேலில், சுகாதாரப் பாதுகாப்பு மீதான இரண்டு தாக்குதல்களை WHO உறுதி செய்துள்ளது. சுகாதாரப் பாதுகாப்பு மீதான தாக்குதல்கள் அனைத்துலகச் சட்டத்தை மீறுவதாகும்,'' என்றார் அவர்.
ஜெனீவாவில் நடைபெற்ற இணையவழியான செய்தியாளர் சந்திப்பில் தெட்ரோஸ் அவ்வாறு கூறினார்.
விமானப் போக்குவரத்துத் தடைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து நெரிசல் காரணமாக, துபாயில் உள்ள உலக சுகாதார நிறுவன விநியோக மையத்தைச் சென்றடையும் பொருட்களின் அளவு குறைந்துள்ளது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)