பெங்களூர், மார்ச் 11 (பெர்னாமா) -- ஈரானில் ஏற்பட்டிருக்கும் போரின் காரணமாக சமையல் எரிவாயு விநியோகம் குறைந்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் சேவையில் இடையூறு ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு, அவற்றை தற்காலிகமாக மூடுவதற்கான சாத்தியம் இருப்பதால், தொழில்துறையின் கோரிக்கைகளை பரிசீலிக்க அதிகாரிகள் ஒரு சிறப்பு செயற்குழுவையும் அமைத்துள்ளனர்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்திருக்கும் போர் காரணமாக வளைகுடாவிலும் ஹொர்முஸ் நீரிணையிலும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால், அதன் விலையும் போக்குவரத்து செலவுகளும் அதிகரித்துள்ளன.
அதோடு, கட்டார் மற்றும் சவூதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளின் ஏற்றுமதிகளும் உற்பத்தியும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
திரவ பெட்ரோலிய எரிவாயு, எல்.பி.ஜி-ஐ இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, உள்நாட்டு பயன்பாட்டிற்காக உற்பத்தியை அதிகரிக்க, சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)