கோலாலம்பூர், மார்ச் 09 (பெர்னாமா) -- இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தடுப்பதற்கு, அச்சேவை வழங்குநர்கள் தொடக்கக்கட்ட தணிக்கை நடவடிக்கையை அமல்படுத்த தேவையான கருவியை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் நிறைவு செய்யும் கட்டத்தில் உள்ளது.
மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இணையத் தளங்களில், தங்கள் நடவடிக்கையை மேற்கொள்ள, சேவை வழங்குநர்கள் அனுமதிப்பதையோ அல்லது மறைமுகமாக உதவுவதையோ தடுப்பதே, அதன் நோக்கம் என்று தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் கூறினார்.
இந்தக் கருவியின் கீழ், இணையச் சேவை வழங்குநர்கள் முதற்கட்ட சோதனையை நடத்த வேண்டிய பல குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தியோ தெரிவித்தார்.
''எனவே, மலேசியாவில் உள்ள பயனீட்டாளர்களுக்கு இதுபோன்ற இடுகைகளை ஆதரவளிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும், மோசடி செய்பவர்கள் பணம் பெறுவதற்கு தளம் அனுமதிக்கப்படாது என்பதை உறுதிசெய்யும் வகையில், இப்போது ஒரு உள்ளடக்கக் குறியீட்டைத் தயாரிக்க விரும்புகிறோம்,'' என்றார் அவர்.
இன்று, மேலவையில் செனட்டர் தியூ வேய் கெங் எழுப்பியக் கூடுதல் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் அவ்வாறு விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)