Ad Banner
Ad Banner
 உலகம்

இத்தாலி; டிராம் தடம் புரண்டதில் இருவர் பலி

28/02/2026 01:04 PM

மிலான், பிப்ரவரி 28 (பெர்னாமா) -- வெள்ளிக்கிழமை, இத்தாலி மத்திய மிலானில் டிராம் தடம் புரண்டதில் இருவர் உயிரிழந்தனர்.

மேலும் சுமார் 40 பேர் காயமடைந்ததாக தீயணைப்பு துறை தெரிவித்திருக்கிறது.

தண்டவாளத்தை விட்டு விலகி, அருகில் உள்ள ஒரு கடை ஜன்னலில் TRAM மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி வழங்கப்பட்டது.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மிலானில் பொது போக்குவரத்திற்கு டிராம் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)