Ad Banner
Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

சீனப் பெருநாள் கொண்டாட்டம்; சுற்றுப்பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு 

17/02/2026 08:03 PM

சிப்பாங், பிப்ரவரி 17 (பெர்னாமா) -- இவ்வாண்டு சீனப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் KLIA-விற்கு வருகைப் புரிந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

வருகை தளத்தில் Tourism Malaysia ஏற்பாடு செய்திருந்த இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சீன இசைக் கருவிகளுடன் அவர்களின் பாரம்பரிய சிங்க நடனங்களும் இடம்பெற்றன.

சீனப்புத்தாண்டு மற்றும் TMM 2026 எனப்படும் 2026 மலேசியா சுற்றுலா ஆண்டு என்ற கருப்பொருளில் தயாரிக்கப்பட்ட சுமார் 3,000 நினைவுப்பரிசுப் பைகள்  மலேசியா  வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டன

இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் Datuk டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங்  பயணிகளுக்கான  நினைவுப்பரிசுப் பைகளை வழங்கினார்.

"அனைத்துலக சுற்றுலாப் பயணிகள் அல்லது நாடு திரும்பும் மலேசியர்களின் பாதுகாப்பிற்காக விமான நிலையத்தில் ஒன்றுக் கூடிய தொழில்துறையினர், விமான நிறுவனங்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அனைவருக்கும் சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் அவர்.

இன்று, செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)