Ad Banner
Ad Banner
 பொது

பல்வேறு இனங்களுக்கு இடையே நிலவும் அமைதி பாதுகாக்கப்பட வேண்டும்

15/02/2026 03:54 PM

ஈப்போ, 15 பிப்ரவரி (பெர்னாமா) --  மலேசியாவின் பல்வேறு இனங்களுக்கு இடையே நிலவும் அமைதி, நாட்டின் முன்னேற்றத்தில் ஓர் அடிப்படை அங்கமாக இருப்பதால் அது பாதுகாக்கப்பட வேண்டும்.

மலாய், சீனர், இந்தியர், இபான் மற்றும் கடசான் உள்ளிட்ட பல்வேறு இனங்களை உள்ளடக்கிய 3 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுடன் அமைதியான நாடாக இருப்பதால் மலேசியா ஒரு தனித்துவமான நாடு என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

பண்டிகை காலங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பல இனங்களின் நடனங்கள் மூலம் வெளிப்படும் கலாச்சார பன்முகத்தன்மை, ஒற்றுமையின் அடையாளமாக முன்னிலைப்படுத்துவதை அன்வார் சுட்டிக்காட்டினார்.

''நமது மக்களுக்கு, பிள்ளைகளுக்கு நாம் எடுத்துரைக்க வேண்டும். மலேசியா முன்னேற்றமடைய வேண்டுமென்றால், எளிதாக வருமானம் ஈட்ட முடிய வேண்டுமென்றால், பொருளாதார வளர்ச்சி, கல்வியில் முன்னேற்றம், வளர்ச்சிக் கண்ட மருத்துவ வசதி போன்றவை வேண்டுமென்றால், நம் நாடு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற உறுதிபாட்டை நாம் கொண்டிருக்க வேண்டும்'', என்றார் அவர்.

பேராக் ஈப்போ, சோங் வா கந்தான் பாரு சீனப்பள்ளியில் நடைபெற்ற சீனப்புத்தாண்டு நிகழ்ச்சியில் அன்வார் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்கும், வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சர் ஙா கோர் மிங்கும் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)