Ad Banner
 பொது

அசாம் பாக்கி விசாரணை; சிறப்பு செயற்குழுவிற்கு  வாய்ப்பளிக்க வலியுறுத்து

13/02/2026 06:39 PM

ஷா ஆலம், பிப்ரவரி 13 (பெர்னாமா) --  எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தொடர்புடைய குற்றச்சாட்டுகள் மற்றும் விவகாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள அரசாங்கம் அமைத்திருக்கும்  சிறப்பு செயற்குழுவிற்கு அனைத்து தரப்பினரும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியிருக்கின்றார்.

எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்னர், அக்குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முழுமையாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் உறுதியான அடிப்படை இருக்கிறதா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

"அரசாங்க தலைமைச் செயலாளர், முன்னதாகவே தகவலைக் கொடுத்தார். முதலில் அவர் தயாராகட்டும், இது என்னவென்று பார்க்கட்டும். தேசிய சட்டத்துறை தலைவருடன் ஆய்வு செய்ய வேண்டும். பொது சேவை தலைவர், முதலில் வழக்கமான செயல்முறையைப் பின்பற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்."
முதலில் அவர் ஆய்வு செய்யட்டும். வழக்கு எவ்வளவு தீவிரமானது என்று முதலில் தெரிய வேண்டும். அடிப்படை இருந்தால், அதை ஆராய்வோம். நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அழுத்தத்தில் இருப்பதால், உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுக்காதீர்கள். அவ்வாறு முடியாது. எனவே, ஆராய்வோம். இன்று காலைதான் அதைப் பற்றி விவாதித்தோம்," என்றார் அவர்.

இன்று, ஷா ஆலம் Politeknik Sultan Salahuddin Abdul Aziz Shah ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)