சிப்பாங், 09 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி, சிலாங்கூர், சிப்பாங், டெங்கிலில் தனிநபருக்குச் சொந்தமான நிலமொன்றை அத்துமீறி ஆக்கிரமித்ததாக, இன்று சிப்பாங் Majistret நீதிமன்றத்தில் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பாதுகாவலர் ஒருவர் மறுத்து விசாரணைக் கோரினார்.
குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டிருந்த 49 வயதுடைய எம்.பரமகுரு என்பவர் மாஜிஸ்திரேட் கைரதுல் அனிமா ஜெலானி முன்னிலையில் அதை மறுத்திருந்தார்.
கடந்தாண்டு ஜூன் 19ஆம் தேதி மாலை மணி 4.45-க்கு, ஜாலான் சிலாங்கூர், டெங்கில் என்ற முகவரியில் உள்ள சுஹாய்லி அஹ்மாட் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை அனுமதியின்றி ஆக்கிரமித்ததாக, ஓர் ஆலயத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கும் பரமகுரு மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 447-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆறு மாத கால சிறைத்தண்டனை அல்லது மூவாயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
வழக்கை செவிமடுத்த கைராதுல் அமினா நான்காயிரம் ரிங்கிட் ஜாமினில் பரமகுருவை விடுவிக்க அனுமதி அளித்தார்.
மேலும், ஆவண சமர்ப்பிப்புக்காக இவ்வழக்கின் அடுத்த செவிமடுப்ப மார்ச் 12ஆம் தேதிக்கு அவர் நிர்ணயித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)