கோலாலம்பூர், பிப்ரவரி 02 (பெர்னாமா) -- கோலாலம்பூரின் அடையாளச் சின்னமாகத் திகழும் சுல்தான் அப்துல் சமாட் கட்டிடம் இன்று காலை 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா கண்டது.
பொது விடுமுறையைப் பயன்படுத்தி பெரும்பான்மையாக மக்கள் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
சுமார் ஓராண்டு காலமாக விரிவான மறுசீரமைப்பு பணியில் இருந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது இன்று பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் காண முடிந்தது.
இன்று காலை வானிலையும் மக்களுக்குச் சாதகமாக அமைந்திருந்ததால் சிறு குழுக்களாகவும் பயண நிறுவனங்களின் மூலமும் அதிகமான சுற்றுப் பயணிகள் சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தைப் பார்வையிட வருகை புரிந்திருந்தனர்.
"இன்று நிறைய சுற்றுப்பயணிகள் இருக்கின்றனர். இதற்கு முன்பு நான் இரவு நேரத்தில் வந்திருந்தேன். அதிகமான சுற்றுப்பயணிகள் இருந்தனர்", என்றார் டான் கிங் ஹோய்.
"அழகாக மட்டுமல்ல தத்ரூபமாகவும் இருக்கின்றது. தற்போது மலேசியா மேம்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் கூறியது போல. இது நாட்டிற்கு ஒரு சுமையல்ல. மாறாக, நம் நாட்டிற்குச் சுற்றுப்பயணிகளை அழைத்து வரும் சொத்துக்கள்", என்றார் கெனி யாப்.
முன்பு வரலாறு படித்துள்ளோம். அதனால் கோலாலம்பூரின் அசல் அர்த்தத்தைப் போலவே கடந்த காலக் கதைகளையும் பார்ப்பது மிகவும் வேடிக்கையாக இருந்தது அதனால் நான் மீண்டும் வரலாற்றைப் படிக்க விரும்பினேன்'', என்றார் ஃபதின் சுஹானா.
இதனிடையே சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தினுல் கோலாலம்பூர் நகர கலைக்கூடமும் திறக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரின் தொடக்கக்கால ஆய்வுகள் மற்றும் அதில் பங்கேற்ற தலைவர்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த கலைக்கூடம் மக்களுக்கென ஒரு மாத காலத்திற்கு இலவசமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)