Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

MYNIISE செயல்முறை செப்டம்பரில் முழுமையாகசெயல்படுத்தப்படும்

04/05/2026 06:37 PM

புத்ராஜெயா, 04 மே (பெர்னாமா) -- நாட்டின் அடையாள அமைப்பையும் மக்களுக்கு வழங்கப்படும் சேவையையும் வலுப்படுத்தும் முயற்சியாக, வரும் ஜூன் மாதத்தில் மைகாட் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படுவதைத் தொடர்ந்து, தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு செயல்முறை, MyNIISe, செப்டம்பர் மாதத்தில் முழுமையாகச் செயல்படுத்தப்படும்.

தேசிய அடையாளத்தின் நிர்வாகத்தைச் சீரமைப்பதிலும், மக்களின் நடமாட்டங்கள் சுமுகமாகவும் சீராகவும் நடைபெறுவதை உறுதி செய்வதிலும், அந்த அமலாக்கம் உள்துறை அமைச்சிற்கு ஒரு முக்கியமான தருணமாக அமையும் என்று அமைச்சர், டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தற்போதைய தேவைகள் மற்றும் பெருகிவரும் சிக்கலான பாதுகாப்பு சவால்களுக்கு ஏற்ப, அண்மைய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய அடையாள அட்டைகள் மற்றும் கடப்பிதழ்கள் அந்தப் புதிய ஆவணங்களில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.

''இந்த ஜூன் மாதத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை நம்மால் சிறப்பாகக் கடந்து செல்ல முடியும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. ஏனெனில், ஒரு கட்டத்தில், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட, புதிய தன்மையுடைய ஆவணங்களை நாம் வெளியிட வேண்டியிருக்கிறது. அதற்காகவே நாங்கள் நீண்ட காலமாக உழைத்து வருகிறோம்,'' என்றார் அவர்.

இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சின் மாதாந்திர சந்திப்பில் உரையாற்றிய சைஃபுடின் அவ்வாறு கூறினார்.

கூட்டரசு அரசியலமைப்புத் திருத்தத்தில் அங்கீகரிக்கப்பட்டபடி, குடியுரிமை விண்ணப்பத் தகவல்களை நிரப்புவதை சாத்தியமாக்க, வரும் ஜூன் மாதம் தொடங்கப்படுவதற்கு முன்னரே, இந்த செயல்முறை அனைத்து முன்நிபந்தனைகளையும் வழங்கும்போது, ​​தமது தரப்பு வெகுதூரம் முன்னேறியிருப்பதைக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)