Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களுக்குப் பெரும் நன்மைகளை வழங்கும் 'MYSUWA'

04/05/2026 06:39 PM

புத்ராஜெயா, 04 மே (பெர்னாமா) -- அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டியதன் தேவையைக் குறைப்பதன் மூலம்,

திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட மலேசியப் பிரஜைகளுக்கான நிர்வகிப்பு செயல்முறை MYSUWA, வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களுக்கு நன்மைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயலாக்க தன்னியக்கம், நிறுவனங்களுக்கு இடையிலான தரவு ஒருங்கிணைப்பு மற்றும் வலுவான தரப்பு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் வழி, தேசிய பதிவுத்துறையின் பணியை விரைவுபடுத்துவதற்கு இச்செயல்முறை உதவும் என்று உள்துறை அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குடியுரிமை தகுதி பெறுவதற்கான விண்ணப்பங்களின் நிர்வாகத்தை விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையில் சீரமைப்பதற்கு, கூட்டரசு அரசியலமைப்பின் மூன்றாம் திருத்தத்திற்கு ஏற்ப ஓர் இலக்கவியல் முன்னெடுப்பே MYSUWA ஏன்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இச்செயல்முறையின் மூலம், இலக்கவியல் ஆவணங்களைப் பதிவேற்றுதல், நிகழ்நேர நிலை சரிபார்ப்புகள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான தானியங்கி அறிவிப்புகள் உட்பட, விண்ணப்பங்களை முழுமையாக இணையத்தில் பூர்த்தி செய்ய அனுமதிக்கும் ஒரு தளமாகவும் இது அமைந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)