மெல்போர்ன், பிப்ரவரி 1 (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி மகளிர் பட்டத்தை கசாக்ஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை எலெனா ரைபகினா கைப்பற்றினார்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், உலகின் முதன்நிலை வீராங்கனை
பெலாருசின் அரினா சபலென்காவை அவர் தோற்கடித்தார்.
மெல்போர்ன் பார்க் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ரைபகினா 6-4, 4-6, 6-4 என்ற நிலையில் அரினா சபலென்காவை வீழ்த்தினார்.
இதன் வழி, உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் அவர் ஆஸ்திரேலிய மண்ணில் தமது முதல் பட்டத்தை சொந்தமாக்கி கொண்டுள்ளார்.
மேலும், 2022-ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்திற்குப் பின்னர், இது இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகவும் அமைந்துள்ளது.
தொடர்ந்து மூன்றாவது ஆஸ்திரேலிய பட்டத்தை வெல்லும் இலக்கில் இருந்த சபலென்கா, வலுவான போட்டியை வழங்கி தோல்வி கண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)