Ad Banner
Ad Banner
 பொது

சுல்தான் அப்துல் சாமாட் கட்டிட மறுசீரமைப்பு; நவீன மலேசியாவை உருவாக்கும் அரசாங்கத்தின் இலக்கு

31/01/2026 04:22 PM

கோலாலம்பூர், ஜனவரி 31 (பெர்னாமா) -- இந்நிலையில் கோலாலம்பூரில் உள்ள பாரம்பரியக் கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் குறிப்பாக சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நவீனமான மலேசியத் தலைநகரை உருவாக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

இந்த முயற்சி வரலாறு தொடர்ந்து பாதுகாப்படுவதையும் புரிந்து கொள்ளப்படுவதையும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள வழிகாட்டியாகப் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதாக அவர் விளக்கினார்.

''சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடமும், இந்த முழு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வளாகமும், தொடர்ந்து நாட்டின் அடையாளத்தை பிரதிபலிக்கும் சின்னமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். முன்னேற்றமும் வளர்ச்சியும் கொண்ட ஒரு நாடு, தனது வரலாற்று வேர்களிலிருந்து விடுபடக் கூடாது.வளர்ச்சி, பொருளாதார வலிமையில் மட்டுமில்லாமல், ஆன்மா, மதிப்புகள் மற்றும் மனிதநேயத்துடன் இருக்க வேண்டும்.'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் / பிரதமர்

இன்று மாமன்னர் கலந்து கொண்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தின் முதற்கட்ட நிறைவு விழாவுவில் பிரதமர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)