ஜாலான் ராஜா, ஜனவரி 31 (பெர்னாமா) -- கோலாலம்பூர், சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடம் மறுசீரமைக்கப்பட்டு இன்று நடைபெற்ற அதன் முதற்கட்ட நிறைவு விழாவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
கோலாலம்பூரின் அடையாளச் சின்னமான அக்கட்டிடத்திற்கு வருகை தந்த மாமன்னரைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார்.
Khazanah Nasional நிறுவனத்தின் கீழ் கடந்த 11 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தின் ஒரு பகுதியை மாமன்னர் இன்று திறந்து வைத்தார்.
ஆரம்ப காலத்தில் அக்கட்டிடம் நாட்டின் நிர்வாக மையமாகச் செயல்பட்டது.
அதன் பின்னர், அப்போதைய சிலாங்கூர் சுல்தான் அலமர்ஹும் சுல்தான் அப்துல் சமத் அல்மர்ஹும் ராஜா அப்துல்லாவை நினைவுகூரும் வகையில் அக்கட்டிடத்திற்குச் ‘சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடம்’ என மறுபெயரிடப்பட்டது.
தற்போது அக்கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகள் தகவல் மையம் உட்பட பல்வேறு வசதிகளைப் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)