Ad Banner
 சிறப்புச் செய்தி

நாடு முழுவதும் உள்ள 155 ஆலயங்களுக்கு முதற்கட்டமாக 31 லட்சம் ரிங்கிட் நிதி

27/01/2026 08:31 PM

புத்ராஜெயா, ஜனவரி 27 (பெர்னாமா) -- நாடு முழுவதும் உள்ள சுமார் 155 ஆலயங்களுக்கு  தர்மா மடானி திட்டத்தின் கீழ் அரசாங்கம் முதற்கட்டமாக மொத்தம் 31 லட்சம் ரிங்கிட் நிதியை வழங்கியுள்ளது.

ஆலயங்களை, வழிபாடுகள், கல்வி, ஆன்மிகம், கலாச்சார நடவடிக்களுக்காகவும் சமூக மையங்களாக மேம்படுத்துவதற்கும் தர்மா மடானி திட்டத்தின் வழி அரசாங்கம் தொடர்ந்து முயற்சிப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

''இரண்டு கோடி ரிங்கிட்டை பிரதமர் ஆலயங்களுக்கு வழங்கியுள்ளார். பல திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு முதல் கட்டமாக 155 ஆலயங்களுக்கு வழங்கியுள்ளோம். இது முதல் கட்டம். இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் விரைவில் செய்யப்படும்,'' என்றார் அவர்.

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட ஆயிரம் ஆலயங்களுக்கு தர்மா மடானி திட்டம் இலக்கு கொண்டுள்ள நிலையில், இரண்டு கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

தகுதிப் பெற்ற ஆலயங்களுக்கு தலா இருபதாயிரம் ரிங்கிட் வழங்கப்படும்.

பதிவு தொடங்கப்பட்டதில் இருந்து சுமார் 915 விண்ணப்பங்கள் பெற்றப்பட்டுள்ள வேளையில், இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா அவற்றை மதிப்பாய்வு செய்து வருவதாக ரமணன் தெரிவித்தார்.

இதனிடையே, ஆலய நிர்வாகத்தினர் சமூகத் திட்டங்களை வெளிப்படையாகவும் நேர்மையுடனும் செயல்படுத்துவதோடு அதன் வழிகாட்டுதல்களை அமைப்பார்கள் என்று தாம் நம்புவதாக ரமணன் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)