இந்தோனேசியா, 26 ஜனவரி (பெர்னாமா) -- இந்தியா ஹைதராபாத்தில் உள்ள நான்கு மாடி தளவாடக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், இரு சிறுவர்கள் மற்றும் ஒரு மூதாட்டி உட்பட குறைந்தது ஐவர் மாண்டனர்.
சனிக்கிழமை இரவு இத்தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் கூறியது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் அடித்தளத்தில் பலர் சிக்கிக்கொண்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்தது.
மீட்பு நடவடிக்கையின் வழி அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
அலட்சியத்தின் காரணமாக கடை உரிமையாளர் மீது குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று போலீஸ் தெரிவித்திருக்கிறது.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)