Ad Banner
 பொது

மனதை நெகிழச் செய்த தாதியரின் செயல்

25/01/2026 05:53 PM

கோலாலம்பூர், 25 ஜனவரி (பெர்னாமா) --  அண்மையில் சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வந்த இந்திய முதியவருக்கு தாதி ஒருவர் உணவு ஊட்டிய காணொளி, மதம் மற்றும் நம்பிக்கையைக் கடந்து கருணையையும் மனிதாபிமானத்தையும் பிரதிபலிக்கின்றது.

நூர் டீனா நட்சீவா என்ற அந்த தாதியின் செயல், சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்ஃகிப்ளி அஹ்மாட்டின் கவனத்தை வேகுவாக ஈர்த்தது.

எனவே, நேற்று, பினாங்கு, செபிராங் ஜெயா மருத்துவமனையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட டாக்டர் சுல்ஃகிப்ளி, சம்பந்தப்பட்ட தாதியை அடையாளம் கண்டு பாராட்டினார்.

சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்ட அந்த காணொளி அவரை மிகவும் கவர்ந்ததாகவும், சம்பந்தப்பட்ட தாதியை நேரில் சென்று சந்திக்க தூண்டியதாகவும் டத்தோ ஶ்ரீ சுல்ஃகிப்ளி கூறினார்.

டீனாவின் அச்செயல் ஒருவரை கௌரவித்து வழங்கப்படும் விருதுக்கு நிகராகாது என்று, தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை மருந்து மாத்திரை அல்லது ஊசிகளால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று இல்லாமல், அன்பு நிறைந்த சிகிச்சையின் வழியும் குணப்படுத்த முடியும் என்பதை நூர் டீனாவின் செயல் நிரூபித்திருப்பதாக டத்தோ ஶ்ரீ சுல்ஃகிப்ளி புகழாரம் சூட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)