பட்டர்வொர்த், ஜனவரி 24 (பெர்னாமா) -- தற்காப்பு, சுகாதாரம் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகப்படியான விலை உயர்வுகள் மூலம் மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முறையற்ற வணிகக் கூட்டமைப்புகளின் நடைமுறையைத் தொடர வேண்டாம் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் அனைத்து தரப்பினருக்கும் நினைவூட்டினார்.
முறையற்ற வணிகக் கூட்டமைப்புகள் இருப்பது, மக்களுக்கு சுமையை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அரசாங்க ஒதுக்கீடுகளை வீணடிப்பதாகவும், பொது வசதிகள் மற்றும் அடிப்படை சேவையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்குப் பாதகத்தை விளைவிக்கும் என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.
''முறையற்ற வணிகக் கூட்டமைப்புகளை நம்பியிருக்காதீர்கள். தற்காப்பு அமைச்சில் வணிகக் கூட்டமைப்புகள், சுகாதார அமைச்சில் முறையற்ற வணிகக் கூட்டமைப்புகள், பொதுப்பணித் துறையில் முறையற்ற வணிகக் கூட்டமைப்புகள். எனவே, இறுதியில், முறையற்ற வணிகக் கூட்டமைப்புகளினால், விலைவாசி உயரும் காரணத்தினால் ஏற்படும் அழுத்தத்தில் நாம் வாழ்கிறோம்,'' என்றார் அவர்.
கொள்முதல் முறையிலும் சில சந்தைகளிலும், முறையற்ற வணிகக் கூட்டமைப்புகளின் ஆதிக்கம் நியாயமற்ற விலை உயர்வுகளுக்கு வழிவகுக்கிறது.
அதனால், பிற பகுதிகளில் மருத்துவமனைகள், சிகிச்சையகங்கள் மற்றும் பொது வசதிகளின் கட்டுமானம் போன்ற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்குவதில் அரசாங்கம் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் சுட்டிக் காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)