பெர்மாத்தாங் பாசிர், ஜனவரி 24 (பெர்னாமா) -- இந்தோனேசியா, சபா - கலிமந்தான் எல்லைக்கு அருகில் உள்ள நுனுக்கான் பகுதியில் உள்ள மூன்று கிராமங்களுக்கு இழப்பீடாக 5,207 ஹெக்டர் நிலத்தை மலேசியா அந்நாட்டிடம் ஒப்படைத்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
எனினும், நில இழப்பீடு பிரச்சனையில் மலேசியா விரைவில் சரியான முறையில் பேச்சு வார்த்தை நடத்தும் என்று அவர் தெரிவித்தார்.
''அவரிடம் விளக்கம் இருக்கிறது. நாங்கள் சரியாகத்தான் பேச்சு வார்த்தை நடத்தினோம். அது சரியில்லை. அவர் ஒரு கருத்தை முன்வைத்தார்,'' என்றார் அவர்.
இன்று, பினாங்கு, பெர்மாத்தாங் பாசிரில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டிற்கான கலாச்சார மற்றும் மக்கள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர், செய்தியாளர்களிடம் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இத்தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
செபாத்தே தீவுப் பகுதியில் உள்ள எல்லைப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், வடக்கு கலிமந்தான், நுனுக்கானில் உள்ள மூன்று கிராமங்கள் மலேசியாவிற்கு மாற்றப்பட்டுள்ளதோடு, மலேசியாவிடமிருந்து இந்தோனேசியாவிற்கு கூடுதல் 5,207 ஹெக்டேர் நிலம் கிடைத்துள்ளதாக அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)