Ad Banner
 பொது

இஸ்தானா நெகாரா நுழைவாயிலில் பாதுகாப்புத் தடுப்பை மதுபோதையில் மோதிய ஆடவர் கைது

23/01/2026 02:34 PM

கோலாலம்பூர், 23 ஜனவரி (பெர்னாமா) -- இன்று அதிகாலை, இஸ்தானா நெகாராவின் இரண்டாவது நுழைவாயிலில் உள்ள பாதுகாப்புத் தடுப்பை, மதுபோதையில் இருந்த வாகனமோட்டி ஒருவர் மோதிய சம்பவத்தில் அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 வயதாக அந்நபர், தொயொதா வியோஸ் ரக காரில், புக்கிட் டமான்சாராவிலிருந்து பயணித்து வந்தபோது, அதிகாலை மணி 3.30-க்கு, அச்சம்பவம் நிகழ்ந்ததாக கோலாலம்பூர், போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை தலைவர் ஏசிபி முஹமட் சம்சூரி முஹமட் இசா தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இவ்விபத்தினால், அந்த வாகனத்தின் முன்புறம் மற்றும் அந்நுழைவாயிலில் உள்ள தடுப்பு கம்பமும் வாயிலும் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பான விசாரணையில், போலீசார் மறைக்காணி காட்சியைப் பெற்றதோடு அந்த ஓட்டுநரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

மேலும், அவரிடம் சுவாசப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக முஹமட் சம்சூரி கூறினார்.

பரிசோதனையில், ஓட்டுநரின் உடலில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, 100 மில்லிலிட்டர் இரத்தத்தில் 166 மில்லிகிராம் மது இருப்பது கண்டறியப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)