கோலாலம்பூர், ஜனவரி 22 (பெர்னாமா) -- லட்சக்கணக்கான ரிங்கிட் கள்ளப்பண பரிமாற்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் தரைப்படைத் தளபதி டான் ஸ்ரீ முஹமட் ஹபிசுதீன் ஜந்தான்-னுக்கும் அவரின் மனைவி சல்வானி அனுவார் @ கமாருதீன்-னுக்கும் எதிரான வழக்கை அரசு தரப்பு நிரூபிக்கும்.
நீதிமன்றத்தில் அக்குற்றச்சாட்டு நீருபிக்கப்படுவதை உறுதிசெய்ய தங்கள் தரப்பு தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் டத்தோ வான் ஷஹருடின் வான் லடின் தெரிவித்தார்.
''ஏனென்றால், அது லட்சக்கணக்கான டாலர்களை உள்ளடக்கியது. ஆனால், நாங்கள் காத்திருந்து பார்ப்போம். எங்கள் வழக்கை நிரூபிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.'' என்றார் டத்தோ வான் ஷஹருடின் வான் லடின்.
நாளை, ஷா ஆலம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் கள்ளப்பண பரிமாற்றத்தை உட்படுத்திய மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளை டான் ஸ்ரீ முஹமட் ஹபிசுதீன் எதிர்கொள்ளவிருக்கிறார்.
அதேபோன்ற குற்றச்சாட்டில் அவரின் மனைவி திரெங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருப்பதாக வான் ஷஹருடின் தெரிவித்தார்.
அக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் கோலாலம்பூர் ஷா ஆலம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, ஒன்றிணைக்கப்பட்டு அங்கு விழக்கு விசாரணை நடத்தப்படவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)