Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

அண்டை நாட்டிலிருந்து போலி சுடும் ஆயுதங்களைக் கடத்த முயன்ற இருவர் கைது

17/03/2026 04:43 PM

ஜித்ரா, 17 மார்ச் (பெர்னாமா) --  கடந்த சனிக்கிழமை, புக்கிட் காயூ ஹித்தாம் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகம், ICQS வழியாக அண்டை நாட்டில் இருந்து போலியான சுடும் ஆயுதங்களைக் கடத்த முயன்றதாக நம்பப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய நிலையில் காணப்பட்ட Perodua Myvi ரக கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, 27 மற்றும் 21 வயதான அந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர், சுப்ரின்டெண்டன் முஹமட் ரட்ஸி அப்துல் ரஹிம் கூறினார்.

காரின் பின்புறத்தில், மேலும் சோதனையிட்டதில் குண்டுகளோடு போலித் துப்பாக்கிகள் அடங்கிய எட்டுப் பெட்டிகள், துப்பாக்கி குண்டுகள் அடங்கிய நான்கு பெட்டிகள், மணித் தோட்டாக்கள் அடங்கிய எட்டு நெகிழிப் பைகளும், 10 எரிவாயு பாட்டில்களும் கண்டெடுக்கப்பட்டன.

போலியான சுடும் ஆயுதங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் பினாங்கைச் சேர்ந்த தொழிற்சாலைப் பொறியியலாளராகப் பணிபுரியும் 27 வயது இளைஞர் முக்கிய சந்தேக நபர் ஆவார்.

உணவு விநியோகப் பணியாளராகப் பணிபுரியும் அவரது நண்பர் அவருடன் துணையாக மட்டுமே சென்றது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவ்விரு சந்தேக நபர்களும் இன்று வரையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, 1960-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டம் செக்‌ஷன் 36-ரின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று, குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முஹமட் ரட்ஸி அத்தகவல்களைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)