கோலாலம்பூர், 17 மார்ச் (பெர்னாமா) -- மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் உள்ளிட்ட உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்கான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் போதுமானதாக இருக்கும் என்றும் விலைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தையில் தொடர் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக விநியோகம் மற்றும் விலை நிலவரத்தை அமைச்சு கவனமாக கண்காணித்து வருவதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்கப் பிரிவு தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் தெரிவித்தார்.
விநியோகச் சங்கிலியில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் தடுப்பதற்காக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ அஸ்மான் கூறினார்.
கடந்த வாரம் நடைபெற்ற வாழ்க்கை செலவினத்திற்கான தேசிய நடவடிக்கை மன்றம், NACCOL கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து பிரதமரிடமும் தெரிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
"எனவே, இதுவரை நாட்டில் விநியோகம் போதுமானதாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிகழ்ந்த போரினால் எங்களுக்கு சற்று அதிர்ச்சி ஏற்பட்டிருந்தபோதிலும், விலை இன்னும் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆனால், இதுவரை இந்த விவகாரம் கே.பி.டி.என் அமைச்சின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளது", என்றார் அவர்.
இன்று, செவ்வாய்க்கிழமை பெர்னாமா தொலைக்காட்சியின் தயாரிப்பிலான Apa Khabar Malaysia நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)