Ad Banner
 பொது

சமூக ஊடகங்களுக்கான உரிம நிபந்தனைகள் மதிப்பாய்வு செய்யப்படும்.

22/01/2026 04:48 PM

கோலாலம்பூர், ஜனவரி 22 (பெர்னாமா) -- குறைந்த எண்ணிக்கையிலான பயனர்கள் இருந்தாலும் இணையம் வழி தீங்கு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் 80 லட்சம் பயனர்களைக் கொண்டிருக்கும் சமூக ஊடகங்களுக்கான உரிம நிபந்தனைகள் மதிப்பாய்வு செய்யப்படும்.

மலேசியாவில் 80 லட்சம் பயனர்களைக் கொண்டிருக்கவில்லை என்று எக்ஸ் சமூக ஊடக வலைத்தளம் தெரிவித்திருப்பதால் தற்போது உரிமம் பெறும் செயல்முறையில் அதன் நிறுவனத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், எக்ஸ் சமூக ஊடகத்தின் Grok ஏ.ஐ. செயலி தவறுதலாக பயன்படுத்தப்பட்டிருப்பதை தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் சுட்டிக்காட்டினார்.

''எக்ஸ் தளத்தில், @Grok கணக்கு உள்ளது. எனவே இதனால் பல சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். இவ்வளவு பெரிய அளவிலான சம்பவம் நிகழ்ந்துள்ளதால், 80 லட்சம் பயனர் வரம்பை நாங்கள் மறு மதிப்பீடு செய்வோம். 80 லட்சத்திற்குக் குறைவாக இருந்தாலும் கூட இணையத்தில் தீங்கு ஏற்படாது என்று இல்லை.'' என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்.

ஏ.ஐ செயல்பாடுகளின் அபாயங்களை மதிப்பிடுவதற்கும் Grok மீதான தடை நிரந்தரமாக மேற்கொள்ளப்படுமா என்று தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர்டத்தோ மும்தாஜ் முஹமட் நவிஎழுப்பிய கேள்விக்கு ஃபஹ்மி அவ்வாறு பதிலளித்தார்.

புதன்கிழமை, நடைபெற்ற X சமூக ஊடகத் தள நிறுவனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கு ஃபஹ்மி தலைமை தாங்கினார்.

அக்கூட்டத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் பகிரப்படுவதைத் தடுப்பதில் அவர்கள் தங்கள் உறுதிப்பாட்டையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தியதாக ஃபஹ்மி கூறினார்.
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)