ஜப்பான், ஜனவரி 22 (பெர்னாமா) -- ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே-வை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2022-ஆம் ஆண்டு மேற்கு ஜப்பானின நாரா நகரில் தோ்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஷின்சோ அபே-வை வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்தை 45 வயதான தெசுயா யமகாமி ஒப்புக்கொண்டார்.
குற்றவாளி தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அரசுத் தரப்பு கோரிய ஆயுள் தண்டனையை ஏற்று நீதிமன்றம் இந்தத் தீா்ப்பை வழங்கியது.
அவரின் அச்செயல் நாட்டின் போருக்கு பிந்தைய வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு குற்றமாகவும் அரசுத் தரப்பினர் குறிப்பிட்டனர்.
Unification Church எனும் மத அமைப்பினால் பாதிப்படைந்து தாம் துயரமான சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் அவ்வமைப்புடன் ஷின்சோ அபே-வுக்குத் தொடா்பு இருந்ததால் அவரை கொலைச் செய்யும் நிலை உருவானதாகவும் யமகாமி கூறியிருந்தார்.
நீதிமன்றத்தில் விசாரணையின் போது குற்றவாளி தரப்பில் சிறைத் தண்டனை காலம் 20 ஆண்டுகளுக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.
இருப்பினும், பொது இடத்தில் துப்பாக்கியைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல் மிகவும் கொடூரமானது எனக் குறிப்பிட்ட நீதிபதி தண்டனைக் குறைப்பை நிராகரித்தாா்.
ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய அபே 2020-ஆம் ஆண்டில் பதவியிலிருந்து விலகிய பிறகும் ஒ
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)