Ad Banner
 பொது

கொலை வழக்கிற்குத் தொடர்புடைய சந்தேக நபருக்குத் தடுப்பு காவல்

03/02/2026 07:01 PM

அலோர் ஸ்டார், பிப்ரவரி 03 (பெர்னாமா) -- கடந்த திங்கட்கிழமை, கெடா, ஜாலான் தஞ்சோங் பெண்டஹாராவில் உள்ள வீடொன்றில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அக்கொலை வழங்கில் தொடர்புடையதாக நம்பப்படும் 28 வயதான முக்கிய சந்தேக நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302இன் கீழ் இன்று தொடங்கி ஏழு நாள்களுக்கான தடுப்பு காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் நூர் சயிபா முஹமட் ஹம்சாஹ் இன்று பிறப்பித்தார்

கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்புடன் கெடா மாநில போலீஸ் துறை குற்றப் புலனாய்வு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்றிரவு மணி 8.34க்கு அச்சந்தேக நபரைக் கைது செய்ததாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சைட் பஸ்ரி சைட் அலி குறிப்பிட்டிருந்தார்.

கொலை சம்பவம் நிகழ்ந்த அடுத்த 24 மணிநேரத்திற்குள் சம்பந்தப்பட்ட அந்நபர் கைது செய்யப்பட்டதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அதோடு, சந்தேக நபருக்குக் குற்றச் செயல்கள் தொடர்பான முந்தைய பதிவுகள் இருப்பததும் கண்டறியப்பட்டதாகச் சைட் பஸ்ரி கூறினார்.

இதனிடையே கடந்த திங்கட்கிழமை கெடா ஜாலான் தஞ்சோங் பெண்டஹாரா, தாமான் சுல்தான் அப்துல் ஹலீமில் உள்ள வீடொன்றில் வயிறு, தலை மற்றும் உள்ளங்கை உட்பட உடலின் மூன்று பகுதிகளில் கத்திக்குத்து காயங்களுடன் 52 வயதுடையச் சஹ்ருல்லைல் பசீர் இறந்து கிடக்க காணப்பட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)