புத்ராஜெயா, ஜனவரி 7 (பெர்னாமா) -- எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரெடல் ஃபன் தலைமை செயல்முறை அதிகாரி நஸ்ரின் ஹாசன்-ஐ கொலை செய்த குற்றச்சாட்டில் சமீரா முசாபர் மற்றும் இரண்டு இளைஞர்களை விடுவித்த தீர்ப்பைச் கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த இறுதி மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் டத்தோ அபு பக்கர் ஜெய்ஸ் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஏகமனதாக நிராகரித்ததோடு அக்குற்றச்சாட்டிலிருந்து அம்மூவரையும் விடுவித்து விடுதலை செய்தது.
தங்கள் மீதான குற்றச்சாட்டில் இருந்து அம்மூவரையும் விடுதலை செய்யும்போது உயர் நீதிமன்றமும் மேல்முறையீட்டு நீதிமன்றமும் வழங்கிய காரணங்களில் எவ்வித தவறையும் நீதிமன்றம் கண்டுபிடிக்கவில்லை என்று அபு பக்கர் தீர்ப்பு வழங்கும்போது தெரிவித்தார்.
மூன்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் மரணத்திற்கு வழிவகுக்கும் காயங்களை ஏற்படுத்துவதற்கு பொதுவான நோக்கம் இருந்ததாக நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)