ஜாலான் பார்லிமன், ஜனவரி 21 (பெர்னாமா) -- முதன்மை நெடுஞ்சாலையை விட SMART LANE எனப்படும் அவசரத் தடத்தில் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான விபத்துகள் சாலையைப் பயன்படுத்துபவர்களின் அலட்சியப் போக்கினால் ஏற்படுகின்றதே தவிர நெடுஞ்சாலையின் கட்டமைப்பால் அல்ல என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
புத்ரா மஹ்கோட்டா-சவுத்வில்லே போன்ற வழித்தடங்களில் SMART LANE அமல்படுத்தத் தொடங்கியதில் இருந்து சாலை விபத்துகள் 22 விழுக்காடு வரை குறைந்துள்ளதாகப் பாதுகாப்பு பகுப்பாய்வு முடிவுகள் காட்டுவதை டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி சுட்டிக்காட்டினார்.
"ஒட்டுமொத்தமாக அவசரத் தடத்தில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அந்த வழியாகச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அவை குறிப்பிடத்தக்கதாக இல்லை" என்றார் டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி.
இதனிடையே பெருநாள் காலங்களில் நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நீண்டகால திட்டங்களில் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கத் திட்டமும் அடங்கும் என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)