சபா, ஜனவரி 19 (பெர்னாமா) -- நாளை நடைபெறவிருக்கும் கினபாத்தாங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாங் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பில் 100 விழுக்காட்டு வாக்குப் பதிவை பெறுவதற்கு தேர்தல் ஆணையம் இலக்கு வைத்துள்ளது.
இன்று அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் சுமூகமாக நடைபெறுவதாக தேர்தல் நிர்வாக அதிகாரிடாக்டர் ஏடி ஷய்சுல் ரிசாம் அப்துல்லா தெரிவித்தார்.
கினபாத்தாங்கான் போலீஸ் தலைமையகத்தில் உள்ள வாக்களிப்பு மையத்தில் 14 தேர்தல் ஆணைய அதிகாரிகள் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று டாக்டர் ஏடி ஷய்சுல் ரிசாம் அப்துல்லா கூறினார்.
போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களின் துணைவர்கள் உட்பட 196 பேர் வாக்களிக்கவிருக்கும் முன்கூட்டியே வாக்களிப்பிற்காக ஒரு வாக்குச்சாவடி திறக்கப்படும்.
நாங்கள் தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டியைப் பின்பற்றுவதால் காலை மணி 8-க்குத் திறந்து மாலை மணி 5-க்கு மூடுகிறோம். என்றார் டாக்டர் ஏடி ஷய்சுல் ரிசாம் அப்துல்லா.
வாக்குப்பதிவு மாலை மணி ஐந்துக்கு நிறைவடைந்ததும் கினபாத்தாங்கான் போலீஸ் தலைமையகத்தில் அந்த வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டு பின்னர் வாக்களிப்பு தினமான ஜனவரி 24-ஆம் தேதி வெளியிடப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)