பெட்டாலிங் ஜெயா, 17 ஜனவரி (பெர்னாமா) -- இந்திய பொது பூப்பந்து போட்டியின் கிண்ணத்தை வெல்லும் இலக்கில் நாட்டின் மகளிர் இரட்டையர் பெர்லி தான் - எம் தீனா தோல்வி கண்டனர்.
இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அவர்கள் ஜப்பான் விளையாட்டாளர்களுடன் களமிறங்கினர்.
இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பெர்லி தான் - எம் தீனா, யுகி ஃபுகுஷிமா - மயு மட்சுமொதோ -வுடன் மோதினர்.
முதல் சுற்றில் 16-21 என்று தோல்வி கண்ட பெர்லி - தீனா , இரண்டாம் செட்டிலும் 13-21 என்ற புள்ளிகளில் தோல்வியைத் தழுவினர்.
இந்த ஆட்டம் 46 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.
யுகி ஃபுகுஷிமா - மயு மட்சுமொதோ ஜோடியுடன் நடைபெற்ற கடந்த மூன்று ஆட்டங்களிலும் பெர்லி - தீனா தோல்வி கண்டனர்.
வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஜகார்த்தாவில் நடைபெறவிருக்கும் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் Pearly-Thinaah அமெரிக்க விளையாட்டாளர்களுடன் மோதவுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)