ஈப்போ, 15 ஜனவரி (பெர்னாமா) -- பேராக், ஈப்போவில் உள்ள அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயத்திலும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உழவர் திருநாளான இந்நன்னாளில் நாட்டிலுள்ள விவசாயத் துறை தொடர்ந்து செழிப்புடன் திகழ வேண்டி, 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது.
காலையில் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர், இரண்டு பானைகளில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையல் வைக்கப்பட்டது.
இல்லங்களில் பொங்கல் வைப்பதற்கு முன்னதாக, காலை மணி 7 தொடங்கியே சுற்று வட்டாரத்திலுள்ள பக்தர்கள் ஆலயத்தின் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
நண்பகல் வரையில் ஆலயத்தில் வழிபாடுகள் தொடர்ந்தன.
மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகி பண்டிகையைக் கொண்டாடியப் பின்னர், தை மாதத்தின் முதலாம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்குத் தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)