கோலாலம்பூர், 14 ஜனவரி (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான் மாநில, யாங் டி-பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார்.
துவாங்கு முஹ்ரிஸ் மற்றும் அவரது துணைவியார் துவாங்கு அய்ஷா ரொஹானி தெங்கு பெசார் மஹ்முட் உட்பட முழு அரச குடும்பமும் நல்ல ஆரோக்கியம், செழிப்பு, பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றும், சிறந்த முறையில் நாட்டை வழிநடத்த வேண்டும் என்றும் தாம் இறைவனைப் பிராத்தனை செய்து கொள்வதாக, தமது வாழ்த்து செய்தியில் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
துவாங்கு முஹ்ரிசின் ஆட்சியை இறைவன் ஆசிர்வதிக்க வேண்டும் என்று, தமது முகநூல் பதிவில் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டிருந்தார்.
பிறந்தநாளை முன்னிட்டு, துங்கு கெச்சில் முடா துங்கு டத்தோ மஹ்மூட் ஃபௌசி துங்கு முஹிடின் தலைமையில் 532 பேருக்கு டத்தோ ஶ்ரீ அந்தஸ்து கொண்ட நட்சத்திரங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதனிடையே, இன்று இஸ்தானா பெசார் ஶ்ரீ மெனாந்தியில் நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கான விருது வழங்கும் விழாவின் முதல் அமர்வு நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டாவது அமர்வு ஜனவரி 20 மற்றும் மூன்றாவது அமர்வு ஜனவரி 27 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)