பாகிஸ்தான், ஜனவரி 14 (பெர்னாமா) -- பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராய்ச்சியில் நடைபெற்ற மாபெரும் திருமண நிகழ்ச்சியில் இந்து மதத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்ய பொருளாதார வசதி இல்லாத ஜோடிகளுக்கு உதவும் நோக்கில் இந்த கூட்டுத் திருமண வைபவம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
கராய்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடைபெற்ற இந்த கூட்டுத் திருமண விழாவில் வண்ணமயமான உடைகளில் அலங்கரிக்கப்பட்ட மணமக்கள் உற்சாகமான இசைக்கு நடனமாடினர்.
திருமண செலவுகளை ஏற்றுக் கொண்டு குளிர்சாதனப் பெட்டி மற்றும் சலவை இயந்திரம் போன்ற வீட்டிற்குத் தேவையான பொருள்களையும் திருமணம் செய்த வசதி குறைந்த ஜோடிகளுக்கு அங்குள்ள மக்கள் வழங்கியுள்ளனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில் சுமார் 44 லட்சம் இந்துக்கள் வசித்து வருகின்றனர்.
இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.14 விழுக்காட்டை மட்டுமே குறிக்கின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)