தெஹ்ரான், 14 ஜனவரி (பெர்னாமா) -- தெஹ்ரான் உயர் அதிகாரிகளுடனான அனைத்து சந்திப்புகளையும் அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப் ரத்து செய்ததை அடுத்து, அவ்விரு நாடுகளும் புதிய மோதலை எதிர்கொள்வதற்கான சாத்தியம் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், டிரம்பின் புதிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக ஈரானிய இராணுவம் கூறியுள்ளது.
"உதவி வந்து கொண்டிருக்கிறது" என்று கூறி, ஈரானியர்களை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யுமாறு தமது ''Truth Social'' சமூக ஊடகத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அது தொடர்பிலான கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஈரானைக் கையாள்வதில் அமெரிக்காவின் முதன்மை அணுகுமுறையாக அரசதந்திரம் இருந்தாலும், தேவைப்பட்டால் இராணுவ நடவடிக்கைக்கான சாத்தியத்தை டிரம்ப் நிர்வாகம் நிராகரிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லியேவிட் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த வான் மற்றும் ஏவுகணை தாக்குதலை வலுப்படுத்தும் நோக்கத்துடன், காஹ்தார்-இல் உள்ள ஏ.ஐ உடெய்ட் விமான தளத்தில் புதிய நடவடிக்கை மையம் திறக்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது
கடந்த ஜூன் மாதம் தெஹ்ரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க தாக்குதல் தொடுத்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இந்த தளத்தை இலக்கு வைத்ததுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)