Ad Banner
 பொது

மலேசியா- துருக்கி: முக்கியத் துறைகளில் ஏழு ஆவணங்கள் கையெழுத்தாகின

08/01/2026 04:24 PM

அன்காரா, 08 ஜனவரி (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் துருக்கிய அதிபர் ரிஜெப் தய்யிப் எர்டுவானும் நேற்று, புதன்கிழமை பல்வேறு முக்கியத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வியூக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஏழு ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.

கையெழுத்திடப்பட்ட ஆவணங்களில் உயர்மட்ட வியூக ஒத்துழைப்பு மன்றம், HLCSS-ஐ உருவாக்குவது குறித்த கூட்டுப் பிரகடனமும் அடங்கும்.

அதோடு, மலேசிய உள்துறை அமைச்சுக்கும் டெசான் ஷிப்யார்ட்-க்கும் இடையே பல்நோக்கு இலக்கு கப்பல், எம்.பி.எம்.எஸ் 2-ஐ வாங்குவதற்கான ஒரு அங்கீகாரக் கடிதம், எல்.ஓ.ஏ-வும் கையெழுத்திடப்பட்டது.

மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி-யும் துருக்கி குடியரசின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப ஆணையமும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு துறை, ஐ.சி.டி-இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

ஆராய்ச்சி மற்றும் வியூகச் சிந்தனை துறை, நிதி மற்றும் முதலீடு தொடர்பாகவும் இரு நாடுகளும் மேலும் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]