அன்காரா, 08 ஜனவரி (பெர்னாமா) -- மலேசியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி Order of the Republic எனும் துருக்கியின் மிக உயரிய விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதிபர் வளாகத்தில் நடைபெற்ற அவ்விழாவில் துருக்கி அதிபர் ரிஜெப் தய்யிப் எர்டுவான் அவருக்கு அவ்விருதை வழங்கினார்.
அனைத்து மலேசியர்களின் சார்பாக மிகுந்த நன்றியுணர்வுடனும் பணிவுடனும் அவ்விருதை ஏற்றுக் கொள்வதாக டத்தோ ஶ்ரீ அன்வார் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கான பகிரப்பட்ட இலக்கை அடிப்படையாகக் கொண்ட நீண்டகால நட்பையும் இவ்விருது குறிக்கிறது.
இந்நிலையில், இரு நாட்டு மக்களின் நலனுக்காக, பல்வேறு வியூகப் பகுதிகளில் மலேசியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த அங்கீகாரம் தொடர்ந்து ஓர் உந்துதலாக அமையும் என்று அன்வார் நம்பிக்கைத் தெரிவித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]