வாஷிங்டன் டி.சி., ஜனவரி 09 (பெர்னாமா) -- அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட நான்கு விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவில் ஒருவர் கடுமையான உடல்நலப் பிரச்சனையை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து திட்டமிட்டதைக் காட்டிலும் சில மாதங்களுக்கு முன்னதாகவே நாசா அவர்களைப் பூமிக்கு அழைத்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இது சுற்றுப்பாதை ஆய்வகத்தின் 25 ஆண்டுகால வரலாற்றில் அவசரமாகத் திரும்பிய முதல் சம்பவம் இதுவாகும் என்று விண்வெளி நிறுவன மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோயுற்ற அந்த விண்வெளி வீரருக்கு அனைத்துலக விண்வெளி நிலையத்தில் முழுமையான சிகிச்சை வழங்க முடியாததால் அவரைப் பூமிக்குத் திருப்பி அனுப்ப நாசா முடிவு செய்ததாகச் செய்தியாளர் கூட்டத்தில் நாசா நிர்வாகி ஜரெட் இஸாக்மன் கூறினார்.
விண்வெளி வீரரின் தனியுரிமை காரணமாக நால்வரில் யார் என்பது வெளியிடப்படவில்லை.
அதோடு, அந்த காயம் விண்வெளி பணியின் போது ஏற்பட்டதல்ல என்று நாசாவின் சுகாதார தலைவரும் மருத்துவ அதிகாரியுமான ஜேம்ஸ் போக் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாகத் திட்டமிடப்பட்ட விண்வெளி நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டதுடன் குழுவின் பயணத்தையும் முன்கூட்டியே முடிக்க நாசா பரிசீலித்து வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)