Ad Banner
 பொது

எர்டோகனின் சகோதரத்துவ விருந்தோம்பலுக்கு அன்வார் பாராட்டு

08/01/2026 03:59 PM

அன்காரா, 08 ஜனவரி (பெர்னாமா) -- துருக்கிக்கான அதிகாரப்பூர்வப் பயணத்தின்போது, அக்குடியரசின் அதிபர் ரிசெப் தயிப் எர்டோகனின் வழக்கத்திற்கு மாறான, நேர்மையான மற்றும் சகோதரத்துவ விருந்தோம்பலுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருவழி உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, எர்டோகனின் அழைப்பை ஏற்று அன்வார் செவ்வாய்க்கிழமை தொடங்கி துருக்கிக்கு மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

''உங்களை ஒரு பீடமாக, மனசாட்சியின் குரலாக, உங்கள் மகத்தான நாடான துருக்கிய குடியரசிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கும், குறிப்பாக முஸ்லிம் உலகிற்கு சிறந்த தலைமைத்துவத்தையும் துணிச்சலையும் காட்டியவராக நான் பார்த்திருக்கிறேன். எனவே, எங்களின் ஒத்துழைப்பை உயர்மட்ட வியூக ஒத்துழைப்பு மன்றமாக மேம்படுத்த ஒப்புக்கொண்டதற்கு நன்றி. மேலும் மலேசியாவின் சார்பாக, இது அரிதானது என்பதை நான் கூற வேண்டும். இதுபோன்ற ஒத்துழைப்பு எங்களுக்கு பல நாடுகளுடன் இல்லை,'' என்றார் அவர்.

எர்டோகன் மற்றும் எமினின் வரவேற்புடன், அதிபர் வளாகத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ இரவு விருந்து உபசரிப்பில், பிரதமர், அவரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் மலேசிய பேராளர் குழுவும் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)