Ad Banner
 பொது

HLSCC கூட்டத்தின் மூலம் மலேசியா- துருக்கி வரலாறு படைத்தன

08/01/2026 03:28 PM

அன்காரா, 08 ஜனவரி (பெர்னாமா) -- பரஸ்பர நன்மைக்காக பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்ற, HLSCC எனப்படும் மலேசியா-துருக்கி உயர்மட்ட வியூக ஒத்துழைப்பு மன்றத்தின் முதல் கூட்டத்திற்கு, இரு நாடுகளின் தலைவர்களும் இணைந்து தலைமையேற்ற போது அவ்விரு நாடுகளும் வரலாற்று தருணத்தைப் பதிவு செய்தன.

துருக்கி அதிபர் ரிஜெப் தய்யிப் எர்டுவானின் அழைப்பை ஏற்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்நாட்டிற்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் அலுவல் பயணத்துடன் இவ்வியூகக் கூட்டம் நடைபெற்றது. 

அதிபர் வளாகத்தில் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு, எர்டுவான் வழங்கிய அதிகாரப்பூர்வ வரவேற்பிற்குப் பின்னர் இக்கூட்டம் நடைபெற்றது. 

அவ்விரு தலைவர்களுக்கும் இடையிலான நான்கு வழி சந்திப்புடன் இக்கூட்டம் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, HLSCC அமைப்பது தொடர்பிலான கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திடப்பட்டது. 

இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் பொருட்டு கட்டமைக்கப்பட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பை HLSCC வழங்குகிறது.

அதுமட்டுமின்றி, மலேசியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான நெருங்கிய உறவையும் நீண்டகால நட்பையும் இது பிரதிபலிக்கிறது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]