Ad Banner
 பொது

கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையின் அடிப்படையில் உருவாகுகிறது வலுவான மடானி அரசாங்கம்

07/01/2026 05:31 PM

துருக்கி, ஜனவரி 7 (பெர்னாமா) -- எந்த ஆணவமும் இல்லாமல் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் வலுவான மடானி அரசாங்கம் மேம்படுத்தப்படுகிறது.

நாட்டின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தில் உள்ள ஒவ்வோர் உறுப்புக் கட்சியும் எப்போதும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்படுவதில் அதன் பலம் அமைந்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி, முயற்சிகளை இன்னும் தீவிரமாக அதிகரிக்க வேண்டும். உதாரணத்திற்கு, செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ போன்ற புதிய தொழில்நுட்ப அம்சங்களிலும், நம்பிக்கை மற்றும் நல்லொழுக்கங்களின் மையக்கருவின் மூலம் புதிய துறைகளிலும் சிறுவர்களுக்கு உதவு வேண்டும். ஓரிரு ஆண்டுகளில் மலேசியா தனது தோற்றத்தை மாற்றும் என்று கற்பனை செய்து பாருங்கள்.'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 

துருக்கி அன்கார-வில் நேற்றிரவு நடைபெற்ற மலேசிய புலம்பெயர்ந்தோருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது பிரதமர் அவ்வாறு கூறினார்.

ஒரு நாட்டின் நாகரிகம் சமூகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி ஆகியவை அவர்களின் மதிப்பு நம்பிக்கை உட்பட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு அர்ப்பணிப்பின் வலிமையைப் பொறுத்தது என்பதை வரலாறு காட்டுவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் விவரித்தார்.

துருக்கி அதிபர்ரெசெப் தயிப் எர்டோகன் அழைப்பை ஏற்று அன்வார் ஜனவரி 8ஆம் தேதி வரை அந்நாட்டிற்கு மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)