விளையாட்டு

மலேசிய பொது பூப்பந்து போட்டியில் லீ சி ஜியா தோல்வி

06/01/2026 07:05 PM

புக்கிட் ஜாலில், ஜனவரி 06 (பெர்னாமா) -- மலேசிய பொது பூப்பந்து போட்டியில் தொடர்ந்து நீடிக்கும் தமது இலக்கில் நாட்டின் ஆடவர் ஒற்றையர் பூப்பந்து விளையாட்டாளர் லீ சி ஜியா தோல்வி கண்டுள்ளார்.

இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்திலேயே அவர் இந்திய விளையாட்டாளருடன் தோல்வியைத் தழுவினார்.

இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டிவுடன் லீ சி ஜியா விளையாடினார்.

இவ்வாட்டத்தில் அவர், 12-21, 17-21 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டு நாட்டின் பூப்பந்து ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தினார்.

இவர்களின் ஆட்டம் 39 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.

இருப்பினும் நாட்டின் கலப்பு இரட்டையரான சென் டாங் ஜிஏ-தோ ஈ வேய் இந்தோனேசியாவின் ஜாஃப்பர் இதயதுல்லா-ஃபெலிஷா பசாரிபு ஜோடியை 21-12, 21-17 என்ற புள்ளிகளில் தோற்கடித்தனர்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)