பொது

வெடி சம்பவத்தில் ஈடுபட்ட ஆடவருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

03/01/2026 07:40 PM

நெகிரி செம்பிலான், ஜனவரி 3 (பெர்னாமா) -- மற்றொரு நிலவரத்தில் தேசா பால்மா-வில் சுயமாக தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்திய சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அந்நபர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை விட்டுப் பிரிந்த முன்னாள் காதலி மீதான கோபத்தாலும் பழி தீர்க்கும் எண்ணத்தாலும் அதனை உருவாக்கியதாக நம்பப்படுகிறது.

62 வயதான அச்சந்தேக நபர், தனது முன்னாள் காதலி மீதான வருத்தம் குறித்து அண்டை வீட்டார் ஒருவரிடம் அடிக்கடி கூறி வந்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜோஹரி யஹ்யா தெரிவித்துள்ளார்.

விசாரணை தொடரப்பட்டு வந்தாலும் அந்நபரின் உடல்நிலை அனுமதிக்காததாலும் இன்னும் சிகிச்சைப் பெற்று வருவதாலும் அது சில வரம்புகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

இவ்வழக்கு தொடர்பில் இதுவரை 24 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜோஹரி யஹ்யா குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)