Ad Banner
 

அடுத்த வாரம் தொடர் மழை பெய்யும்; மெட்மலேசியா எச்சரிக்கை

03/01/2026 05:23 PM

கோலாலம்பூர், ஜனவரி 3 (பெர்னாமா) -- அடுத்த வாரம் தொடங்கி சில மாநிலங்களில் தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனவரி ஐந்தாம் தேதி முதல் எட்டாம் தேதி வரையில் கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் தொடர் மழை பெய்யும் என்று மெட்மலேசியா வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனவரி ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை கேமரூன், லிபிஸ், ஜெரண்டட், மாறன், குவாண்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)