கோலாலம்பூர், 30 டிசம்பர் (பெர்னாமா) -- அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகவிருப்பதை டத்தோ ஶ்ரீ முஹமட் அஸ்மின் அலி உறுதிபடுத்தினார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பொதுச் செயலாளராக தாம் நியமிக்கப்பட்டது, அதன் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் முஹமட் யாசினின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் தாம் இம்முடிவை எடுத்தாக, அவரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அதே தேதியில் சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தொடர்பு அமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும் விலகும் நிலைப்பாட்டையும் தாம் ஏற்றுக் கொண்டதாக, அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)