Ad Banner
Ad Banner
 உலகம்

அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போர்; அயதுல்லா அலி காமெனி பலி

01/03/2026 01:34 PM

தெஹ்ரான், மார்ச் 01 (பெர்னாமா) -- நேற்று தொடங்கி, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதலினால், அந்நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமெனி உயிரிழந்ததார்.

அவரின் மரணச் செய்தியை அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பதற்காக அண்மையில் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதலை தொடங்கின.

இந்த தாக்குதலினால், இன்று அதிகாலை 86 வயதான காமெனி பலியானதாக ஈரானிய அரசு ஊடகம் அறிவித்தது.

அவருடைய மரணத்திற்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக ஈரான் விடுத்து வந்த அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கமும், அதன் அணு ஆயுத திட்டத்தை நிறுத்தவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றன.

1939-ஆம் ஆண்டு வடகிழக்கு ஈரானில் உள்ள மஷாத் எனும் நகரில் பிறந்த காமெனி, 1981 முதல் 1989-ஆம் ஆண்டு வரை ஈரானின் அதிபராக பணியாற்றினார்.

1989-ஆம் ஆண்டு தொடங்கி அந்நாட்டின் உயர்மட்ட தலைவராக பதவி வகித்து வந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)